துபாய்:
மிரேட் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 விமானம் இன்று காலை துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கும்போது  விபத்துக்குள்ளானது.

விமானத்திலிருந்து கரும்புகை வெளிவரும் காட்சி
விமானத்திலிருந்து கரும்புகை வெளிவரும் காட்சி

கேரளாவின் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு துபாய் சென்ற எமிரேட் விமானம். இன்று மதியம் சுமார் 12.45 மணி அளவில் (இந்திய நேரம்) துபாயில் தரை இறங்கும்போது விமானத்தின் பின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியானதை கண்டவுடன் விமானத்திலிருந்த பயணிகள் அவசர அவசரமாக இறக்கப்பட்டனர்.

பயணிகள் இறங்கிய சில நொடிகளில்  விமானம் தீ பிடித்து எரிய தொடங்கியது. விமான நிலைய தீயணைப்பு துறையினர் உடனடியாக தீ அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த விமானத்தில் 282 பயணிகள் பயணம் செய்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை என துபாய் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.