திருமலை:
திருப்பதியில் சிறப்பு சேவை கட்டணத்தை உயர்த்த திட்டமீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருபப்தி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப் படுகின்றன. இதன் படி, ரூ. 50,000 வஸ்த்ர அலங்கார சேவைக் கட்டணம், ஒரு லட்சம் ரூபாயாகவும், ரூ. 1000-ஆக இருந்த கல்யாண உற்சவ சேவைக்கான கட்டணம் ரூ. 2,500 ஆகவும் அதிகரிக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.