வந்தே பாரத் ரயிலின் வேகத்தை மணிக்கு 130 கி.மீ.ஆக அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை தெற்கு ரயில்வே மேற்கொண்டுள்ளது.
பெங்களூரு – ஜோலார்பேட்டை இடையே மணிக்கு 130 கி.மீ வேகத்தில் நேற்று சோதனையோட்டம் நடத்தப்பட்டது.
இந்த பகுதியில் ஏற்கனவே 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும் நிலையில் இது 130 கி.மீ.ராக அதிகரிக்க்கப்படும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னை – பெங்களூரு வழித்தடத்தில் 2 வந்தே பாரத் மற்றும் 2 சதாப்தி ரயில்கள் தினமும் இயங்கி வரும் நிலையில் இந்த 360 கி.மீ. முழுவதும் 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட உள்ளது.
இதனால் வந்தே பாரத் ரயில்களில் பயண நேரம் 25 நிமிடம் குறையும் என்றும் சதாப்தி ரயிலில் பயண நேரம் 20 நிமிடம் குறையும் என்றும் கூறப்படுகிறது.
இந்த வழித்தடத்தில் உள்ள ரயில்வே பாலங்களை வலுப்படுத்துதல் அல்லது புனரமைத்தல், வேலி அமைத்தல், லெவல் கிராசிங்குகளை அகற்றுதல் மற்றும் வளைவுகள் இல்லா வழித்தடம் அமைத்தல் ஆகியவற்றை மேற்கொண்டால் மணிக்கு 130 கி.மீட்டர் வேகத்திற்கும் கூடுதலாக இயக்க வாய்ப்பு இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.