சென்னை
இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
”இன்று மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது.
அதாவது, ஸ்டான்லி, சோழாவரம், அம்பத்தூர், நங்கநல்லூர், ஹஸ்தினாபுரம், பெசன்ட் நகர், செம்பாக்கம், அனகாபுத்தூர், பெருங்களத்தூர், மாடம்பாக்கம், ஆவடி ஆகிய இடங்களில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும்.
பராமரிப்பு பணி மதியம் 2 மணிக்குள் முடிவடைந்து உடனே மின்விநியோகம் கொடுக்கப்படும். எனவே மின்தடைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்”
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel