டில்லி

நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அமெரிக்காவில் சிகிச்சைக்கு சென்றுள்ளதால் பியூஷ் கோயலை இடைக்கால நிதி அமைச்சராக ஜனாதிபதி நியமித்துள்ளார்..

கடந்த வருடம் இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.   அதை ஒட்டி பரிசோதனை மற்றும் மேற்சிகிச்சைக்காக அருண் ஜெட்லி அமெரிக்கா சென்றுள்ளார்.     வரும் பிப்ரவரி மாதம் மத்திய பாஜக அரசின் கடைசி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.     அதற்கான கூட்டமும் சமீபத்தில் நடந்தது.

நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய அருண் ஜெட்லி இந்தியா திரும்புவார் என தகவல்கல் வெளியாகின.   இந்நிலையில் நேற்று இரவு மத்திய நிலக்கரி மற்றும் ரெயில்வே துறை அமைச்சரை இடைக்கால நிதி அமைச்சராக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.    அதை ஒட்டி அருண் ஜெட்லி தற்போது இலாகா இல்லாத அமைச்சராக செயல் படுவார் எனவும் தெரிவிக்கப் படுள்ளது.

கடந்த வருடம் அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்துக் கொள்ள அருண்ஜெட்லி சென்ற போது நிதி அமைச்சர் பொறுப்பை பியூஷ் கோயல் கவனித்துக் கொண்டார்.   தற்போது மீண்டும் அவருக்கு கூடுதல் பொறுப்பாக நிதித்துறை வழங்கப்பட்டுள்ள்ளது.