டில்லி:
இறுதி காலத்தை எட்டியுள்ள பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
கடந்த 4 ஆண்டுகால பாஜக ஆட்சியில் மக்கள் சொல்லொனா துயரத்தை அடைந் துள்ள நிலையில், மக்கள் மாற்று ஆட்சியை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக் கின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
அரசின் சாதனை பட்டியல்:
இந்தியா முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது .
வங்கிகளின் வாரா கடன்கள் பெருமளவு வசூலிக்கப்பட்டு வருகிறது.
எங்கள் அரசிடம் இருந்து வங்கி மோசடி செய்பவர்கள் தப்பிக்க முடியாது
ஜி.எஸ்.டி அறிமுகத்தால் வரி விதிப்பு எளிதாக்கப்பட்டு உள்ளது.
உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடுகளில் இந்தியா 6 வது இடத்திற்கு முன்னேற்றம்
வங்கி துறை சீர்திருத்தங்கள் சிறந்த பலனை தரத் தொடங்கியுள்ளன
வராக்கடனை குறைப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளோம்
ஊழல் இல்லாத அரசாக செயல்பட்டு வருகிறோம்
அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படையாக நடக்கிறது
பினாமி சட்டம், ரியல் எஸ்டேட் தொழிலை சுத்தப்படுத்தியுள்ளது
பொருளாதார குற்றவாளிகளை கைது செய்ய சட்டம் கொண்டு வந்துள்ளோம்
இதுவரை எந்த ஆட்சி காலத்திலும் இல்லாத வகையில் 5 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சி
உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடுகளில் இந்தியா 6 வது இடத்திற்கு முன்னேற்றம்
அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது
பொதுத்துறை வங்கிகளின் நிதி பற்றாக்குறையை சமாளிக்க மறுகட்டமைப்பு முதலீடு வழிவகை செய்யப்பட்டுள்ளது
விலைவாசி உயர்வு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது
விலைவாசியை கட்டுப்படுத்தியிருக்காவிடில் குடும்பங்கள் 35%-40% வரை கூடுதலாக செலவிட வேண்டியிருக்கும்
மாநிலங்களுக்கான நிதிஒதுக்கீடு 32% லிருந்து 42%-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்திலும் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களை அரசு செயல்படுத்தி வருகிறது
21 எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றில் 14 பா.ஜ.க அரசில் அறிவிக்கப்பட்டவை
பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்:
22 வேளாண் விளைபொருட்களுக்கு அதன் உற்பத்தி செலவை விட 50 சதவீதம் கூடுதலாக குறைந்தபட்ச விலை நிர்ணயம்
2 ஏக்கர் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் 3 தவணையாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்
விவசாயிகளே கால்நடை வளர்த்தால், அவர்களுக்கு 2% வட்டி தள்ளுபடி
மீன்வளத்துறைக்கு தனிதுறை ஏற்படுத்த நடவடிக்கை. மீன் பிடி தொழிலில் உலகின் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது .
2020 – க்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க இலக்கு
விவசாயிகளுக்கான வட்டி மானியம் இரட்டிப்பாக்கப்படும்
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வங்கிக்கடன்களுக்கு 3% வரை வட்டி மானியம்
ரூ.6 ஆயிரம் 3 தவணையாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்
விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்குவதன் மூலம் ரூ.75,000 கோடி செலவாகும்
அனைவருக்கு வீடு, கழிப்பறை, மின்சாரம் ஆகியவற்றை 2022-ம் ஆண்டுக்குள் வழங்க மத்திய அரசு திட்டம் .
பசுப்பாதுகாப்புக்கு தேசிய காமதேனு திட்டம் அறிவிப்பு .
உயிர்சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது எஸ்.சி, எஸ்.டி இடஒதுக்கீட்டில் எந்த மாற்றம் கிடையாது
வயதானவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அறிவிப்பு
அங்கன்வாடி பணியாளர்களுக்கு 50% ஊதிய உயர்வு
பணிபுரியும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக அதிகரிப்பு
பெண்கள் நலனுக்காக கூடுதலாக 8 கோடி இலவச காஸ் இணைப்பு வழங்கப்படும். இலவச எரிவாயு இணைப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 6 கோடி இணைப்புகள் இதுவரை தரப்பட்டுள்ளன.
முத்ரா திட்டத்தில் கடன் பெற்றவர்கள் 70 கோடி பேர் பெண்கள் முத்ரா திட்டத்தில் 7.23 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ 3000 ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை
பேட்டரி கார்களை இந்தியாவிலேயே தயாரிக்க முன்னுரிமை வழங்கப்படும்
2030 க்குள் அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை
2030-ல் உலகிலேயே பேட்டரி கார் அதிகம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
மொபைல் இணைப்பில் இணைய வசதியை அதிகளவில் பயன்படுத்தும் நாடுகளில் முதல் இடத்தை பிடித்துள்ளது இந்தியா
ரயில்வே துறைக்கு மூலதன ஆதரவாக சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க திட்டம். முதன்முறையாக மேகாலயா, மிசோரம், திரிபுரா ஆகிய பகுதிகளுக்கு ரயில் இணைப்பு.
வடகிழக்கு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு 21 சதவீதம் அதிகரிப்பு
உடான் திட்டத்தின் கீழ் சாமானியரும் விமானப்பயணம் மேற்கொள்ள முடிகிறது. சூரிய சக்தி மின்சார உற்பத்தி 10 மடங்காக அதிகரித்துள்ளது.
பெரம்பூர் ஐ சி எப் தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்ட அதிவிரைவு ரயில் வந்தே பாரத் என்று பெயரிடப்பட்டு தில்லிக்கும் – வாரணாசிக்கும் இடையே இயக்கப்படும்.