இயற்பியல் பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்

லண்டன்:

பிரபல இயற்பியல் பேராசிரியரும், அறிவியலாளருமான ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார். அவருக்கு வயது 76.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அறிவியலாளருமான ஸ்டீபன் ஹாக்கிங் குவாண்டம் அறிவியல், அணுக்கரு அறிவியல் துறைகளில் பல முக்கிய ஆய்வுகள் செய்தவர்.

இந்த நூற்றாண்டின் புத்திசாலி மனிதர்களில் ஒருவர் என்று போற்றப்படுகிறார்.

மாற்றுத்திறனாளியான இவர், சக்கர நாற்காலியில் உலவியபடியே சாதனைகளை படைத்தவர். இவருக்கு 21 வயது இருக்கும் போது மோட்டார் நியூரான் நரம்பியல் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் இவரது கழுத்திற்கு கீழே உள்ள பகுதி முழுக்க வேலை செய்யாமல் போனது.

அவரது ஆயுள் காலம் சில காலமே என்று மருத்துவர்கள் கூறினர். ஆனால் அதை ஹாக்கிங் தொடர்ந்து உற்சாகமாகவே இயங்கினார்.

நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் இவர் சாதனைகள் படைக்க ஆரம்பித்தார்.. இவரது கண் அசைவுகளை வைத்து என்ன பேசுகிறார் என்று கண்டுபிடிக்க சாப்டவேர் தயாரிக்கப்பட்டு அதுவே அவரது குரலாக மாறியது.

இவர் செய்த ஆராய்ச்சி முடிவுகள் எல்லாம் இப்படித்தான் உருவானது. இவர் ஏலியன்கள் மீது அதிக நம்பிக்கை கொண்டு இருந்தார். கண்டிப்பாக இந்த பிரபஞ்சத்தில் எங்காவது ஒரு இடத்தில் வேற்றுகிரக உயிர்கள் வாழும் என்று குறிப்பிட்டு இருந்தார். அவர்கள் நம்மை சந்திப்பார்களா என்பது மட்டும் சந்தேகம் என்றும் தெரிவித்தார்.

டைம் டிராவலுக்கு சரியான விளக்கம் கொடுத்தவர் இவர்தான். எதிர்காலத்தில் ஒளியை விட வேகமாக மக்கள் பயணம் செய்வார்கள் அப்போது டைம் டிராவல் சாத்தியம் என்று கூறினார். இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியலாளர் என்று போற்றப்பட்ட ஹாக்கிங் மறைவு உலகம் முழுதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Pioneering physicist Stephen Hawking  passes away, இயற்பியல் பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்
-=-