சென்னை :
‘சாஷே’ உலகின் முன்னோடி நிறுவனமாக விளங்கிய வெல்வெட் ஷாம்பு, நிவாரன் 90, மெமரி பிளஸ் தயாரிப்புகளை வழங்கி வந்த தொழிலதிபர் டாக்டர் சி.கே. ராஜ்குமார் காலமானார்.

கெவின் கேர் நிறுவன தலைவர் சி.கே. ரங்கநாதனின் சகோதரரான சி.கே. ராஜ்குமார் 1980-களின் மத்தியில் வெல்வெட் ஷாம்பு நிறுவனத்தை துவங்கி, அதனை சிறு சிறு ‘சாஷே’ பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்து தனது வியாபாரத்தை பெருக்கினார்.
கடந்த மே மாதம் நிவாரன் 90 நிறுவனம் தயாரித்த மருந்தை சோதனை அடிப்படையில் குடித்து பார்த்த இந்நிறுவன மேலாளர் ஸ்ரீநிவாசன் என்பவர் பரிதாபமாக மரணம் அடைந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
Patrikai.com official YouTube Channel