சென்னை:
கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள கேரள மீனவர்களுக்கு ரூ.2ஆயிரம் நிதி வழங்க மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டு உள்ளார். மற்ற சிறு, குறு தொழிலாளர்களுக்கு ரூ.ஆயிரம் வழங்கப்படும் என்றும் கூறி உள்ளார்.
கொரோனா பரவல் தடுப்பு காரணமாக கடந்த மாதம் 24ந்தேதி முதல் மார்ச் 21ந்தேதி வரை 21நாட்கள் ஊரங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் முதன்முதலாக கொரோனா பாதித்த மாநிலமான கேரளாவில் இதுவரை 357 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். அங்கு கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள சிறு,குறு வியாபாரிகளுக்கு நிவாரண நிதியை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
அதன்படி, மாநிலத்தில் உள்ள 1.5 லட்சம் மீனவர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படுகிறது.
50,000 லாட்டரி விற்பனையாளர்களுக்கு தலா ரூ.1,000 மும் வழங்கப்படும்.
லட்சத்து 30 ஆயிரம் கயிர் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 கொடுக்கப்படும்.
தையல் தொழிலாளர் நல நிதி வாரியம், நகை தொழிலாளர் நல நிதி வாரியம், வேளாண் தொழிலாளர் நல நிதி வாரியம், மூங்கில் தொழிலாளர் நலத்துறையில் இடம்பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும்.
பீடி தயாரிப்பு மூலப்பொருட்கள், தயாரிக்கப்பட்ட பொருட்களை கொண்டு செல்ல அனுமதி.
இவ்வாறு முதல்வர் தெரிவித்து உள்ளார்.