சென்னை:

சுருதிஹாசன் தனது ஆண் நண்பருடன் உலா வரும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனை சேர்ந்த அந்த நடிகரின் பெயர் மைக்கேல் கோர்சேல். இருவரும் நீண்ட நாட்களாக டேட்டிங்கில் ஈடுபட்டு வருவது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சமீபத்தில் அந்த நடிகரின் தாயை சுருதிஹாசன் சந்தித்த புகைப்படம் வைரலாகியுள்ளது. இந்த தகவலை சுருதிஹாசன் உறுதிபடுத்தவில்லை. அதே சமயம் இதை அவர் மறுக்கவும் இல்லை.

இது குறித்து அவர் டிஎன்ஏ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘‘நான் எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எதுவும் பேசுவதற்கு இல்லை. அது எனக்கு விலை மதிப்பற்றதாகும். ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் வாழ்க்கை துணை என்பது அவர்களது வாழ்க்கையில் கிடைக்கும் மிகப் பெரிய தூண். இதை நான் யாரிடமும் பகிர்ந்து கொள்ள தயாராக இல்லை. இதை பேசுவதில் எனக்கு ஆர்வமில்லை’’ என்றார்.

இந்த புகைப்படம் தொடர்பான உண்மைகளை இருவரும் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு .ள்ளது.