டாக்

டாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீனப்படைகள் முகாம் பற்றிய புகைப்படங்களும் வீடியோவும் வெளியாகி உள்ளன.

நேற்று முன் தினம் இரவு சீனப் படைகள் இந்திய ராணுவத்தினரைத் தாக்கியதில் சுமார் 20 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  மேலும் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.   சீன வீரர்கள் 5 பேர் மரணம் அடைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் உலவி வருகின்றன.

டிவிட்டரில்  டானிஷ் சித்திக்கி வெளியிட்டுள்ள பதிவில், ராணுவ வாகனங்கள் கல்வான் பள்ளத்தாக்கு, (லடாக் இந்தியாவில்) செல்லும் விண்கலம் எடுத்த புகைப்படங்கள் பதியப்பட்டுள்ளன.   ஜூன் 16 அன்று இந்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.  இவை ராய்ட்டர் செய்தி தளத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு நெட்டிசனான சிவ் ஆரூர் தந்து பதிவில் ஜூன் 15 தாக்குதலுக்கு பிறகும் சீனபபடைகள் கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார்.  அவர் தனது பதிவில் சீனா அங்கிருந்து வெளியேறவில்லை, ஜூன் ஆறாம் தேதி பேச்சு வார்த்தைக்குப் பிறகு பெரிய படைகள் அழைத்து வரப்பட்டுள்ளன, சீனாவுக்குத் திரும்பிச் செல்லும் எண்ணம் இல்லை மற்றும் ஜூன் 15 தாக்குதல் ஏற்கனவே திட்டமிட்ட தாக்குதல் எனத் தெரிவித்துள்ளார்.

புகைப்படங்கள் : Danish siddiqui

வீடியோ : Shiv aroor

உதவி  :  Reuters,

[youtube https://www.youtube.com/watch?v=K55KSn0ZVt4]

[youtube-feed feed=1]