மசாய் மாரா, கென்யா
விலங்குகளுக்கும் தந்தை பாசம் உண்டு என்பதை சமீபத்தில் வெளியான சிங்கத்தின் புகைப்படங்கள் நிரூபித்துள்ளன.
ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் அழகி அவர் தாய் என்பதும் முதல் கதாநாயகன் தந்தை என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்த தந்தைப் பாசம் என்பது பல முறை வெளியில் தெரியாத போதிலும் அவ்வப்போது வெளிப்படுவது உண்டு.
இவ்வகையில் லயன் கிங் என்னும் கார்டூன் படத்தில் முபாசா என்னும் தந்தை சிங்கத்துக்கும் சிம்பா என்னும் மகன் சிங்கத்துக்கும் இடையில் உள்ள அன்பு குறித்து கதை செல்லும்.
தற்போது கென்யாவில் உள்ள மசாய் மாரா என்னும் இடத்தில் உள்ள வனப்பகுதியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சபீன் பெர்னர்ட் என்னும் 53 வயதுப் பெண் வனவிலங்குகள் குறித்த ஆவணப்படம் ஒன்றை எடுத்து வருகிறார். அவர் தந்தையர் தினத்தை முன்னிட்டு சில படங்கள் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களில் ஒரு தந்தை சிங்கம் தனது குட்டியை கட்டி அணைப்பது, மற்றும் விளையாடும் காட்சிகள் உள்ளன.
ஒரு கவிஞர் எழுதியதை போல், “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே” என்னும் வரிகளுக்கு இந்த புகைப்படங்கள் உயிரூட்டி உள்ளன
Thanks : MAIL ONLINE NEWS