சென்னை

மொபைல்களுக்கு போன்பே செயலி வழியாக ரீசார்ச்ஜ் செய்ய சேவை கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

நாடெங்கும் கரன்சி இல்லா பணப் பரிவர்த்தனை செய்ய மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.  இதையொட்டி மக்கள் நேரடியாக வங்கிகள் மூலம் மட்டுமின்றி பல மொபைல் செயலிகள் மூலமும் பண பரிவர்த்தனை செய்து வருகின்றனர்.   இவற்றில் போன்பே என்னும் செயலியும் ஒன்றாகும்.

இந்த செயலிகள் மூலம் மின்சார கட்டணம், தொலைபேசி கட்டணம், ரீசார்ஜுகள் என பல பரிவர்த்தனை செய்யப்படுகின்றன.   இதுவரை இவாறு ரீசார்ஜ் செய்வதற்கு கட்டணம் வ்சூலிக்கப்படுவது இல்லை.   எனவே மக்கள் இந்த செயலிகள் மூலமே ரீசார்ஜ் செய்து வந்தனர்.

இந்நிலையில் இன்று போன்பே செயலி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இனி போன்பே செயலி மூலம் ரி சார்ஜ் செய்ய கட்டணம் வசூலிக்கப்படும்.  அதாவது ரூ.50 முதல் ரூ.100 வரையிலான ரி சார்ஜ்களுக்கு ரூ.1 சேவைக்கட்டணமும் ரூ.100க்கு மேல் ரீசார்ஜ்களுக்கு ரூ.2 சேவைக்கட்டணமும் வசூலிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.