எல் நினோ காரணமாக இந்த ஆண்டு பிலிப்பைன்சில் மாங்காய் விளைச்சல் அமோகமாக விளைந்துள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.

எல்நினோ என்பது வெப்பநிலை ஏற்றதாழ்வை குறிக்கும் ஒரு பொருளாகும். இது ஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் மாதத்தில் தோன்றும். ஆனால் தற்பொழுது இதன் தீவிரம் மற்றும் தாக்கம் கடந்த வந்த ஆண்டுகளில் அதிகமாக காணப்படுகிறது.

இந்த நிலையில், எல்நினோ  வழக்கமாக விளைவதைவிட இந்த ஆண்டு இரண்டு மில்லியன் கிலோவுக்கு அதிகமான மாங்காய்கள் அறுவடை செய்யப்பட்டு இருப்பதாக பிலிப்பைன்ஸ் நாட்டின் விவசாயத்துறை செயலாளர் தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே கடந்த 2015-2016ம் ஆண்டில் இதுபோன்ற மாங்காய் அறுவடை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் வழக்கத்துக்கு மாறாக   இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மாங்காய்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த மாதம் இறுதிக்குள் ஒரு மில்லியன் கிலோ மாங்காய்களை அறுவடை செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும்,  ஏற்றுமதித் தேவைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான உதவிகள் லூசான் மாகான விவசாயிகளுக்கு பயிற்சிகிள் கொடுக்கப்பட்டு வருவதாகவும் கூறி உள்ளார்.