*இரவில் சுதந்திரம் கொடுத்தான்
இங்கும் சூரியோதயம்
உண்டென்பதை மறந்தானோ?

*முட்டாள்களின் கூட்டம் என்றான்…
அறிவாலே உலகத்தை ஆள்கிறோம்!

*அழுக்கு தேசம் இதுவென்றான்…
உலக அழகிகளின் தேசமிது!

*ஆளத்தெரியாது என்றான்….
மக்களாட்சியில் முக்கால் நூற்றாண்டு கண்டோம்!

*விளையாட்டுத் தனமானவர்கள் என்றான்….
61 பதக்கங்கள் வென் றோம் இப்போது!!!

*செயல் பட தெரியாதவர்கள் என்றான்…..
செவ்வாயை கூட ஆராய்வோம் என அறிவித்தோம்!!!!

*பட்டினி போட்டு சென்றான்….
பசுமை புரட்சியால்
படைத்தோம் சாதனை!!!

*குண்டூசி கூட இறக்குமதி செய்த நாட்டில்…
ஏவுகனைகளை ஏந்துகிறோம்.

* பிரபஞ்சமே நம்
பாரதத்தை பீனிக்ஸ்
பறவையாகவே பார்க்கிறது!!!

*அஹிம்சை நம் ஆயுதம்தான். ….
ஆனாலும் இதுவரை நடந்த போர்களில் வென்றது நாமே!!!!

*இன்னும் இன்னும்
உழைதிடுவோம்
உயர்த்திடுவோம்
நம் தேசத்தை

பா.தேவிமயில் குமார்