இந்தூர்
இந்தூரில் தள்ளுவண்டியில் காய்கறி விற்கும் ஆங்கிலம் பேசும் ஒரு பெண் தாம் பி எச்டி முடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாடெங்கும் கொரோனா வேகமாகப் பரவி வருவதால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகச் சாலையோர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று கட்டுக்குள் வராததால் அவர்கள் எப்போது துயரில் இருந்து மீள்வார்கள் என்பது யாராலும் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,
மத்தியப் பிரதேசத்தில் இந்தூர் நகரில் தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்யும் பெண்ணான ரைசா அன்சாரியின் தள்ளுவண்டியை மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற வந்துள்ளனர். அதற்கு அவர் ஆங்கிலத்தில் சரளமாக பேசி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதிகாரிகள் தன்னைப் போன்ற வியாபாரிகளைத் துன்புறுத்துவதாகக் கூறிய அவர் தாம் பி எச்டி பட்டம் பெற்ற முனைவர் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் ரைசா அன்சாரி, “இந்தூரில் சந்தைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் காய்கறிகள் வாங்க யாரும் வருவதில்லை. இதனால் எங்கள் குடும்ப உணவுப் பிரச்சினையைத் தீர்க்க நான் தள்ளுவண்டியில் காய்கறி விற்கிறேன். என்னைப் போல் இங்குப் பலருடைய குடும்பத்திலும் 20 மேற்பட்டோர் உள்ளனர். நாங்கள் எப்படிச் சம்பாதித்து குடும்பத்தினர் பசியை போக்க முடியும்?
நாங்கள் மக்கள் வராததால் வியாபாரமும் செய்ய முடியவில்லை அத்துடன் அதிகாரிகளும் இங்கிருந்து விரட்டுகின்றனர். நான் பிஎச்டி படித்தும் எனக்கு யாரும் வேலை கொடுக்கவில்லை. கொரோனா பரவுதலுக்கு இஸ்லாமியர்கள் காரணம் என்னும் கருத்து பரவியதால் கல்லூரிகள் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் எதுவும் நான் இஸ்லாமியர் என்பதால் எனக்குப் பணி அளிக்கத் தயாராக இல்லை” என தெரிவித்துள்ளார்.
[youtube https://www.youtube.com/watch?v=Q73tq1zdqJc]