டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒராண்டை கடந்தும் உலக நாடுகளுளை அச்சுறுத்தி வருகிறது சீனாவின் கொரோனா வைரஸ். இதன் பரவலை தடுக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. பல நிறுவனங்கள் தடுப்பூசிகளை தயாரித்து சோதனைகளை நடத்தி வருகின்றன. கொரோனா தடுப்பூசிகளில் 95 சதவிகித அளவுக்கு பயன் உள்ளதாக ரஷ்யா உள்பட பல நாடுகள் அறிவித்து உள்ளது. இறுதிக்கட்ட ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதஇறுதியில் அல்லது 2021 முதலில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் நம்பப்படுகிறது.
அமெரிக்காவின் ஃபைசா் நிறுவனம் தயாரித்த கரோனா தடுப்பூசி 95 சதவீத செயல்திறனும், மாடா்னா தடுப்பூசி 94.5 சதவீத செயல்திறனும் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் 90 சதவீதத்துக்கு அதிகமான செயல்திறனைக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸ்ஃபோா்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியானது 70 சதவீத செயல்திறனைக் கொண்டுள்ளதாகவும், மருந்தின் அளவை அதிகரித்தால் 90 சதவீதம் வரை செயல்திறன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்ஸின் தடுப்பூசியும் நல்ல பலனை தருவதாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது. இதையடுத்து, 3வது கட்டமாக மனித சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தலைநகர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று சோதனை தொடங்கி உள்ளது. முதலாவது தடுப்பூசியை அந்த மருத்துவமனையின் நரம்பியல் மையத் தலைவரான எம்.வி.பத்மா ஸ்ரீவாஸ்தவா செலுத்திக் கொண்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த சில தினங்களில் சுமாா் 15,000 தன்னாா்வலா்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தப்படும் என்று எய்ம்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த இறுதிக்கட்ட சோதனையில் பங்கேற்க உள்ள தன்னாா்வலா்களுக்கு 28 நாள்கள் இடைவெளியில் இரு முறை 0.5 மிலி அளவு தடுப்பூசி செலுத்தப்படும என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட சுமாா் 28,500 தன்னாா்வலா்களுக்குகோவாக்ஸின் தடுப்பூசியைச் செலுத்தி பரிசோதிப்பதற்கு பாரத் பயோடெக் நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது. இதையடுத்து, 10 மாநிலங்களில் உள்ள சுமாா் 25 இடங்களில் கோவேக்ஸின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை நடைபெறவுள்ளது.