5 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாக பைசர் நிறுவனம் அறிவிப்பு

Must read

 

கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில், உலகின் பல்வேறு நாடுகளில் மூன்றாவது அலையில், குழந்தைகளும் சிறுவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில், சிறுவர்கள் அதிகளவு பாதிக்கப்படுவதாக கவலை தெரிவித்துள்ள அந்நாட்டு சுகாதாரத் துறை, இதனை தடுக்க தடுப்பூசிகள் தயாரிக்க தேவையான முயற்சி செய்துவருகிறது.

இந்நிலையில், பைசர் – பயோஎன்டெக் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசி சிறுவர்களிடம் நல்ல பலனளிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், 5 – 12 வரையிலான சிறுவர்களிடையே பயனுள்ளதாகவும் பாதுகாப்பானதாகவும் உள்ள இந்த தடுப்பூசியை அவசர தேவைக்காக பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

பைசர் நிறுவனத்தின் இந்த கோரிக்கை விரைவில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிகிறது, சிறுவர்களுக்கான இந்த தடுப்பூசி தொடர்ந்து ஆய்வில் உள்ளபோதும், இந்த ஆண்டு அக்டோபர் இறுதிக்குள் தடுப்பூசி வருவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறிவருகின்றனர்.

5 முதல் 12 வயது வரை உள்ள சிறுவர்களுக்கான இந்த தடுப்பூசி வெளியான பின், ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கான தடுப்பூசியும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

Latest article