லண்டன்
பிஃபிஸர் அல்லது ஆஸ்டிராஜெனிகா இரு டோஸ்கள் தடுப்பூசி செலுத்தினால் டெல்டா வைரஸ் தொற்றை தடுக்கும் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
உருமாறிய கொரோனா வைரஸான டெல்டா வைரஸ் தாக்குதல் உலகெங்கும் கடுமையாக பரவி வருகிறது. இதையொட்டி பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிகைகள் எடுத்து வருகின்றன. உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வைரஸ் மற்றவைகளை விட கடும் பாதிப்பு அளிக்கிறது.
இது குறித்து உலகெங்கும் ஆய்வுகள் நடந்து வருகிறன. இந்நிலையில் நியூ இங்கிலாந்ந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் என்னும் மருத்துவ பத்திரிகையில் ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி இரண்டு டோஸ்கள் பிஃபிஸர் மற்றும் ஆஸ்டிராஜெனிகா தடுப்பூசிகல் எடுத்துக் கொண்டால் டெல்டா வைரஸ் தாக்குதலை தடுக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
இரு டோஸ்கள் பிஃபிஸர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு டெல்டா வைரஸுக்கு எதிராக 88% எதிர்ப்பு திறனும் ஆல்ஃபா வைரஸுக்கு எதிராக 93.7% எதிர்ப்பு திறனும் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. அதே வேளையில் ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசிகள் டெல்டா வைரஸுக்கு எதிராக 67% திறனும், ஆல்ஃபா வைரஸுக்கு எதிராக 74.5% திறனும் கொண்டுள்ளன.
இஸ்ரேல் நட்டில் இருந்து கிடைத்துள்ள தகவலின்படி டெல்டா வைரசுக்கு எதிராக ஒரே டோஸ் பிஃபிஸர் நிறுவன தடுப்பூசிகளை விட ஒரே டோஸ் ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசிகள் அதிக திறனுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன்படி பிஃபிஸர் நிறுவன தடுப்பூசி ஒரு டோஸ் செலுத்திக் கொண்டவார்களுக்கு 36% மற்றும் 30% எதிர்ப்பு திறன் உள்ளதாக கூறப்படுகிறது.