நியூயார்க்: குழந்தைகளுக்கு கொரோனா தொற்றும் அபாயம் குறைவு என்பதால் அவர்களுக்கு அவசரப்பட்டு தடுப்பூசி போட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வந்த நிலையில்,  தற்போது, குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சோதனையை பைஃசர் பயோஎன்டெக் நிறுவனங்கள்  தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது/

உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான ‘பைசர் பயோஎன்டெக்’  தயாரித்த தடுப்பூசிக்கே முதன்முதலாக உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில்  அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த மருந்தானது மைனஸ் 70 டிகிரி உறை வெப்பநிலையில் பராமரிக்கக்கூடியது. இந்த தடுப்பூசியானது 16வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தலாம் என அமெரிக்க கட்டுப்பாட்டாளர்களால் அங்கீகரிக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தரவுகளின்படி, புதன்கிழமை (மார்ச் 24ந்தேதி) காலை நிலவரப்படி, பைஃசர் பயோஎன்டெக் தயாரிப்பான பைசர் தடுப்பூசி  கிட்டத்தட்ட 66 மில்லியன் டோஸ் அமெரிக்காவில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 16 மற்றும் 17 வயதுடையவர்களில் ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

இதற்கிடையில், கடந்த வாரம் மாடர்னா இன்க் நிறுவனம்  6 மாத முதல் 16வயதிற்குட்பட்ட குழந்தை சோதனை, அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து, தற்போது, ‘பைசர் பயோஎன்டெக்’ நிறுவனமும் குழந்தைகளுக்கான சோதனையை தொடங்கியுள்ளது. அதன்படி,  ஃபைசர் இன்க் மற்றும் ஜெர்மன் கூட்டாளர் பயோஎன்டெக் எஸ்இ ஆகியவை இணைந்து,  12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு  கொரோனா தடுப்பூசி சோதனைகளை தொடங்கி உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த,  ஃபைசர் செய்தித் தொடர்பாளர் ஷரோன் காஸ்டிலோ, குழந்தைகளுக்கான தடுப்பூசி சோதனை  (மார்ச் 24ந்தேதி) கடந்த புதன்கிழமை தொடங்கி உள்ளதாகவும், முதலில் ஒருநபருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது,  2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 12 வயது வரம்பிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி விரிவாக்கம் செய்யப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்காக 144 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்களுக்கு முதல் மற்றும் 2வது, 3வது கட்ட சோதனைகளின்போது,  10, 20 மற்றும் 30 மைக்ரோகிராம் ஆகிய மூன்று வெவ்வேறு அளவுகளில் தங்களது இரண்டு-ஷாட் (இரண்டு டோஸ்) தடுப்பூசி செலுத்தப்பட்டு, பாதுகாப்பை உறுதிப்படுத்த  ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் திட்டமிட்டு இருப்பதாகவும், அதன் அடுத்தக்கட்ட சோதனையின்போது  4,500 பேருக்கு நடத்த  திட்டமிட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த  தடுப்பூசி மூலம் உருவாக்கப்படும் பாதுகாப்பு, சகிப்புத்தன்மை மற்றும் நோயெதிர்ப்பு சக்தி  ஆகியவற்றை  மருத்துவர்கள் ஆன்டிபாடி அளவை அளவிடுவதன் மூலம்  சோதிப்பார்கள் என்று தெரிவித்ததுடன்,  2021 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் சோதனையிலிருந்து தரவுகள் கிடைக்கும்.

12 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசியை பரிசோதித்து வருகிறது. வரும் வாரங்களில் அந்த சோதனையிலிருந்து தரவுகள் கிடைக்கும் என்று   என எதிர்பார்ப்பதாகவும் காஸ்டிலோ கூறினார்.