அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பு மருந்தின் நேரடி மதிப்பாய்வு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து,  ஃபிசர் மற்றும் பயோஎன்டெக் உருவாக்கியுள்ள COVID-19 தடுப்பு மருந்தை ஐரோப்பிய சுகாதார வழிகாட்டுதல்கள் நிறுவனம் பரிசீலித்து வருகிறது. ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் (ஈஎம்ஏ) இம்மாத தொடக்கத்தில் அதன் மனிதர்களுக்கான  மருந்துக் குழு  தடுப்பு மருந்து குறித்த குறித்த முதல் பகுதி தரவுகளை மதிப்பீடு செய்து வருவதாகவும், இறுதி முடிவுக்கு போதுமான தரவு கிடைக்கும் வரை தொடர்ந்து செய்யவுள்ளதாகவும்  கூறினார்.

ஃபிசர் மற்றும் பயோஎன்டெக் கூட்டாக வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ஆய்வின் தொடக்கமானது ஆய்வக மற்றும் விலங்கு சோதனையிலிருந்து பெறப்படும் தரவை அடிப்படையாகக் கொண்டது. அத்துடன் மனிதர்களைப் பற்றிய ஆரம்பகால சோதனை, மற்றும் அதன் தரவுகளை சமர்ப்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. தொற்றுநோய்களின் போது தடுப்பு மருந்துகளின் மதிப்பீடுகளை விரைவுபடுத்துவதற்கு EMA “ரோலிங் ரிவியூஸ்” ஐப் பயன்படுத்துகிறது. இதன்படி, ஆய்வுகள் செயலில் இருக்கும்போது அடுத்தடுத்து கிடைக்கவுள்ள தரவுகள் அவ்வபோது ஆய்வு செய்து முடிக்கப்படும்.

கடந்த வாரம், இது அஸ்ட்ராஜெனிகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்து, AZD1222 அல்லது ChAdOx1 nCoV-19 ஐயின் தரவுகளின் மறுபரிசீலனை செய்யத் தொடங்கியது. உலகளவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பலிவாங்கியுள்ள இந்த நோய்க்கு இந்த பிராந்தியத்தில் முதன்முதலில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பிரிட்டிஷ் தடுப்பு மருந்து என்னும் பெயர் கிடைக்க இந்த தடுப்பு மருந்துக்கு சாத்தியமாகலாம். COVID-19 க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க AZD1222 சிம்பன்சியில் சளியை உருவாக்கும் வைரஸை செயலிழப்பு செய்து இந்த தடுப்பு மருந்தில் பயன்படுத்தப்படுகிறது. பிஎன்டி 162 பி 2 எனப்படும் ஃபிசர் மற்றும் பயோஎன்டெக்கின் தடுப்பு மருந்து, புரோட்டின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மெசேஞ்சர் RNA  எனப்படும் mRNAவை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பு மருந்து மக்களுக்கு செலுத்தப்படும்போது,  தனித்துவ கொரோனா வைரஸின் மேற்பரப்பில் உள்ள   புரதங்களை உருவாக்க பிஎன்டி162பி2 தடுப்பு மருந்து மனித செல்களைத் தூண்டும். இவ்வாறு உருவாக்கப்படும் புரதங்கள் ஒரு வைரஸ் தொற்றாக நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தால் உணரப்பட்டு, அதற்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்கும். இது வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி, நமது நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும்.  ஃபிசரின் தடுப்பு மருந்து தற்போது அமெரிக்கா, பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் அர்ஜென்டினாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் மதிப்பீடு செய்யப்படுகிறது.