டில்லி
பெட்ரோல் மற்றும் டீசல் விலை இப்போதைக்குக் குறைய வாய்ப்பில்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடும் உயரத்தை அடைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவதில்லை. இது குறித்து செய்தியாளர்கள் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்விகள் எழுப்பினர்.
நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம், “முந்தைய அரசின் எண்ணெய் பத்திரங்கள் காரணமாக ஏற்பட்ட சுமையால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க இயலவில்லை பெட்ரோல் விஅலி குறித்த மக்களின் கவலை ஏற்புடையதே, மத்திய, மாநில அரசு விவாதித்து வழியை உருவாக்கும் வரை அதற்குத் தீர்வு இல்லை
காங்கிரஸ் அரசு, 1.44 லட்சம் கோடிக்கு எண்ணெய் பத்திரங்களை வெளியிட்டு எரிபொருள் விலையைக் குறைத்தது. தற்போது அதனால்தான் தங்களால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியவில்லை . பத்திரங்களுக்கு வட்டி செலுத்தியபோதும் 1.30 லட்சம் கோடி நிலுவையில் உள்ளது.
எண்ணெய் பத்திரங்களின் சுமை இல்லை என்றால், எரிபொருள் மீதான கலால் வரியைக் குறையில் நிலையில் அரசு இருந்திருக்கும் எரிபொருள் மீதான சுங்க வரிகுறைப்பு தற்போதைக்கு இல்லை. காங்கிரஸ் அரசு வெளியிட்ட எண்ணெய் பத்திரங்களுக்குக் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.70.195 கோடிக்கும் மேல் மத்திய அரசு வட்டி செலுத்தியுள்ளது. தவிர 2020-க்குள் இன்னும் ரூ.37,000 கோடி அளவுக்கு வட்டி செலுத்த வேண்டும் ” என பதில் அளித்துள்ளார்.