மும்பை

ர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் கர்நாடகா தேர்தலுக்குப் பின் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயரும் என பொருளாதார நிபுணர்கள் கூறி உள்ளனர்.

தற்போது கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்து வருகிறது.    ஆயினும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படவில்லை.    எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கலாம் என்னும் அரசு அறிவிப்பை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையில் மாறுதல் இல்லாத சமயத்திலும் பெட்ரோல் விலை உயர்ந்துக் கொண்டே வந்தது.

தற்போது 14 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படாமல் உள்ளது.  இதற்கு கர்நாடக தேர்தலே காரணம் என கூறப்படுகிறது.    இவ்வாறு கடந்த 24ஆம் தேதிக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை மாற்றாததற்கு  எண்ணெய் நிறுவனங்கள் எந்த காரணமும் தெரிவிக்கவில்லை.

கடந்த சனிக்கிழமை கச்சா எண்ணெய் ஒரு பாரலின் விலை $ 69 ஆக இருந்தது.   நேற்று அதன் விலை $ 71.40 ஆக உயர்ந்தது.   எனவே தினமும் விலை ஏற்றும் எண்ணெய் நிறுவனங்கள் கர்நாடகா தேர்தல் முடிந்ததும்  பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கடுமையாக உயர்த்தும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.