மும்பை

ன்று வரலாற்றில் முதல் முறையாக மும்பையில் பெட்ரோல் விலை ரூ.84 ஆகி உள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினம் மாற்றிக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது.   அது முதலே விலை சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது.  கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் சிறிது நாட்கள் விலையில் மாறுதல் இன்றி இருந்தது.   தேர்தல் முடிந்த பிறகு சென்ற திங்கள் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் ஏற ஆரம்பித்துள்ளது.

இன்று முக்கிய நகரங்களில் அறிவிக்கப்பட்டுள்ள விலை வருமாறு

டில்லியில் ரூ. 76.24 ;   கொல்கத்தாவில் ரூ. 78.91;  மும்பையில் ரூ. 84.07; சென்னையில் ரூ.79.13 ;  பெங்களூருவில் ரூ.77.48 என பெட்ரோல் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.    வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ரூ. 84 ஐ மும்பையில் இன்று தாண்டி உள்ளது.

இதே போல டீசல் விலை டில்லியில் ரூ.76.24;  கொல்கத்தாவில் ரூ.78.91;  மும்பையில் ரூ.71.94;  செப்பௌடுக் ர்ய்ய்,71.32;  பெங்களூருவில் ரூ. 68.73 என அறிவிக்கப்பட்டுள்ளது.