டில்லி
நாட்டில் 7 நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 100 ஐ தாண்டி உள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பல நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலம் கங்கா நகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.10.6.64 ஆகும். அடுத்ததாக மத்தியப் பிரதேசம் இந்தூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.103.78 ஆக உள்ளது. அதே மாநிலத்தில் போபாலில் பெட்ரோல் விலை ரூ.10.3.71 ஆக உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் நகரில் பெட்ரோல் லிட்டருக்கு 103 ரூபாய்க்கும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.14 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் பெட்ரோல் லிட்டருக்கு 101.88 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேமாநில தலைநகர மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101.76 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மொத்தம் 7 நகரங்களில் பெட்ரோல் விலை 100- ரூபாயைக் கடந்துள்ளது.
டீசல் விலை ஒரு லிட்டர் ராஜஸ்தானின் கங்கா நகரில் 99.50 ரூபாய்க்கும், ஜெய்ப்பூரில் 95.37 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மத்தியப்பிரதேசத்தில் இந்தூரில் டீசல் லிட்டருக்கு 95.14 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் டீசல் லிட்டருக்கு 95.09 ரூபாய்க்கும் விற்பனையாகுகிறது.
நாளை அதாவது ஜூன் 12 ஆம் தேதி அன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து நாட்டில் அனைத்து பெட்ரோல் பங்குகள் முன்னிலையில் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்த உள்ளது.
[youtube-feed feed=1]