டெல்லி: நாடு முழுவதும் பெட்ரோல் விலை அதிகப்பட்சமாக  ரூ.40க்கு விற்பனை செய்ய முடியும் என பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியசாமி தெரிவித்து உள்ளார். மோடி அரசுக்கு அவர் இந்த ஆலோசனையை தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. இதற்கு பாரதியஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். நிர்வாக சுரண்டல் காரணமாகவே விலை உயர்ந்து வருகிறது என்று மோடி அரசுமீது கடுமையாக தாக்குதல் நடத்தி உள்ளார். அதிகபட்சமாக ரூ.40க்கு மேல் விற்பனை செய்யக்கூடாது என வலியுறுத்தி உள்ளார்.

தற்போது பெட்ரோல் விலை லிட்டர் ரூ.90 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது மக்களிடையே நடத்தப்படும் மிகப்பெரிய சுரண்டல் என்று தெரிவித்திருப்பதுடன்,  பெட்ரோல் சுத்திகரிக்கும் முன்பு அதன் விலை லிட்டர் ரூ.30 மட்டுமே என்று சுட்டிக்காட்டியிருப்பதுடன், மத்திய, மாநில அரசுகளின் வரிகள் மற்றும், பெட்ரோல் பங்கின் கமிஷன் போன்றவற்றாலேயே மேலும் ரூ.60 அதிகரித்து தற்போது ரூ.90 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், வரிகள் மற்றும் கமிஷனை முறைப்படுத்தினால், ரூ.40க்கு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்ய முடியும், அதிகபட்சமாக ரூ.40க்கு விற்பனை செய்யப்பட வேண்டும் பிரதமர் மோடிக்கு ஆலோசனை தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பும் அவர் இதே யோசனையை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.patrikai.com/bjp-leader-swamy-attacks-bjp-govt-for-hike-fuel-priece-says-petrol-should-not-cost-more-than-rs-40-litre-everything-else-is-exploitation/