இஸ்லாமாபாத்
பாகிஸ்தானில் பெட்ரோல்விலை மேலும் உயர்ந்துள்ளது.
பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. ஆகவே உலக வங்கி, அன்னிய செலாவணி நிதியம் போன்றவற்றிடம் இருந்து கடன்களை வாங்கி நிலைமையை சமாளிக்கிறது.
இதனால் இங்கு பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலையும் உயர்த்தப்படுவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக ஏறி உள்ளது.
தற்போது அந்த நாட்டு மதிப்பில் லிட்டருக்கு பெட்ரோல் ரூ.1 மற்றும் டீசல் ரூ.7 உயர்த்தப்பட்டுள்ளதால் பெட்ரோல் ரூ.257, டீசல் ரூ.267 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு இந்த விலை உயர்வு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.