யாங்கூன்
இன்று மியான்மர் நாட்டு பெண் தலைவர் ஆங் சான் சூகி இல்லத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
ஆங் சான் சூகி மியான்மர் நாட்டின் தேசிய ஜனநாயக லீக் தலைவர் ஆவார். ஆங் சான் சூகி 15 ஆண்டுகள் வீட்டுச் சிறை உட்பட 21 ஆண்டுகள் சிறையில் இருந்தார். விடுதலை அடைந்த பின் தீவிர அரசியலில் இறங்கினார். 2012ஆம் ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் அவரது கட்சி வெற்றி பெற்றது.
அதன் பின்னர் அவர் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று 86% தொகுதிகளைக் கைபற்றியது. தற்போது அவர் மியான்மரில் பிரதமருக்கு சமமான மாநில கவுன்சிலர் பதவியையும், வெளிவிவகாரத் துறை அமைச்சராகவும் பணி புரிந்து வருகிறார்
யாங்கூன் நகரில் ஏரிப்பகுதியில் இவரது இல்லம் உள்ளது. இன்று இந்த இல்லத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் அவர் வீட்டில் இல்லாததால் அவர் தப்பி உள்ளார். இந்த தகவலை ஆங் சான் சூயியின் செய்தி தொடர்பு அதிகாரி உறுதி செய்துள்ளார்.