மோகன் ஜி தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகவுள்ள ருத்ர தாண்டவம் திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மதமாற்றம், பி.சி.ஆர். சட்டத்தை தவறாக பயன்படுத்துவது ஆகியவற்றை மையமாக வைத்து இப்படத்தை மோகன் ஜி இயக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

சிறுபான்மை மக்கள் நல கட்சியின் தேசிய தலைவர் சாம் யேசுதாஸ் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில், திரைப்படத்தில் வசனம் மற்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது என்றும் சிறுபான்மை கிருஸ்தவர்களை தவறாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.