புதுச்சேரி,

பீட்டா அமைப்பின் புகார் காரணமாக புதுச்சேரி கோயில் யானை காட்டி விட கவர்னர் கிரன்பேடி உத்தரவிட்டுள்ளார்.

இது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் பல ஆண்டுகள் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பக்தர்களுக்கு ஆசி வழங்கு வருகின்றனர்.

இதுகுறித்து பீட்டா அமைப்பு யானை துன்புறுத்தப்படுவதாகவும், தொடர்ந்து யானை கான்கிரீட் தளத்தில்  நிற்பதாலும், சங்கிலியால் கட்டப்பட்டதாலும் லட்சுமி யானை மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்று பீட்டா, பேடியிடம் புகார் தெரிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து  அந்த கோயில்  யானையை காட்டில் விடும்படி கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

கவர்னரின் இந்த உத்தரவு பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. காலங்காலமாக பராமரிக்கப்பட்டு வரும் இந்துக்களின் சம்பிரதாயங்களில் கவர்னர் தலையிடுவதை ஏற்க முடியாது எனவும் கூறப்படுகிறது.

மேலும்,  நாட்டில் பழகிவிட்ட யானையை திடீரென காட்டில் விட முடியாது. ஏனென்றால், காட்டில் இரை தேடி திண்ணும் இயல்பை நாட்டில் பழகிய விலங்குகள் பெற்றிருக்காது. தவிர காட்டு விலங்குகளை எதிர்கொள்ளும் திறமையும் இருக்காது.

ஏற்கனவே புதுச்சேரி அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் வேளையில், கவர்னரின்  இந்த அறிவிப்பு புதுச்சேரி அரசு அதிகாரிகளுக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தி இருப்பதாக கூறுகிறார்கள்.