சேலம்: சேலம் மாவட்டத்தில், விவசாய நிலத்தில் பூச்சிக்கொல்லி நிறுவனம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் ஆட்சியர் அலுவலகம்  விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்த கெங்க வல்லி அடுத்த மண்மலை ஊராட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய நிலத்தில் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் நிறுவனம் அமைக்க அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  சட்டி ஏந்தியும், கோரிக்கை பதாகைகளை ஏந்தியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பான விசாரணையில், சேலம் அருகே உள்ள  மண்மலை ஊராட்சியில் 6 கிராமங்களை சேர்ந்த சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் வாழ்ந்து வருவதாகவும், சுமார் 7,500 ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்து வருவதாக தெரிவத்த விவசாயிகள், தறபோது, தற்போது அந்த விவசாய நிலத்தில் பூச்சிக்கொல்லி மற்றும் எலி பேஸ்ட் தயாரிக்கும் நிறுவனங்கள் துவங்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இது தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த நிறுவனங்கள் அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.

இந்த பூச்சிக் கொல்லி, எலி பேஸ்ட் நிறுவனங்களால் நீர், மாசு மாசடைந்து விவசாயம் அடியோடு அழிந்து விடும் அபாயம் உள்ளதாக அச்சம் தெரிவித்த விவசாயிகள்,  இது குறித்து கிராம சபை கூட்டத்தில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றியும், ஆட்சியரிடம் புகாரளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.  எனவே தமிழக அரசு உடனடியாக விவசாய நிலங்களில் நடைபெற்று வரும் தனியார் நிறுவன பணிகளை தடுத்து நிறுத்தவும், குவாரியை மூடவும் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அரசு நடடிவக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர்.