சென்னை: அரசியல் விமர்சகர் கிஷோர் கே சாமியை நீதிபதி கடுமையாக சாடியதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது பதிவுகள் வக்கிரமான பதவுகள் அருவருக்கத்தக்து என்று என்று தெரிவித்துள்ளார்.

வலதுசாரி சிந்தனையாளரும், பாஜக ஆதரவாளருமான  கிஷோர் கே சாமி, மாற்று அரசியல் கட்சிகளை கடுமையாகவும், சில வேளைகளில் அருவருப்பாகவும் விமர்சித்து வந்தார். இதனால், இவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. சமீபத்தில்,  முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி குறித்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்து பதிவிட்டிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து  கிஷோர் கே சாமியை கைது செய்தது காவல்துறை.

தொடர்ந்து அவரை, மாதவரத்தில் உள்ள நீதிபதி வீட்டில் போலீசார் ஆஜர்படுத்தப்படுத்தினர். அங்கு பத்ரிக்கையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் முன்ஜாமீன் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் ஏற்கனவே கண்டித்தும் கிஷோர் கே சாமி திருந்தவில்லை என்றும் ,பெண்கள் குறித்து அவரது பதிவுகள் கேவலமான எண்ணம் கொண்டவை என்றும், பெண்களைப் பற்றி குரூரமான, கேவலமான பதிவுகளை கிஷோர் கே சாமி பதிவிட்டுள்ளார் என்று குறிப்பிட்ட நீதிபதி, பெண்கள் குறித்த கிஷோர் கே சாமியின் பதிவுகள் அவரது வக்கிர புத்தியைக் காட்டுகிறது என ஆவேசமாக குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து கிஷோர் கே சாமியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட அவர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டார்.

கிஷோர் கே சாமிமீது ஏற்கனவே பெண் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசியதாக வழக்கு நிலுவையில் இருக்கிறது. மேலும்  இந்த வழக்கிற்காக கடந்த முறையே கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார் கிஷோர் கே சாமி. இந்த வழக்கின் போதே நீதிமன்றம் அவரது பேச்சை கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]