சென்னை: ஒவ்வொரு கிராமப்புற மாணவியருக்கும் தனித்தனியாக தனிநபர் வைப்பு நிதி கணக்கு ஊக்கத்தொகை திட்டம் தொடங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஊக்கத்தொகை வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க, ஒவ்வொரு மாணாக்கர்களின் பெயரிலும் தனித்தனியாக வங்கிக்கணக்கு தொடங்க அறிவித்தப்பட்டு உள்ளது.
அதன்படி, ஆண்டு வருமானம் ரூ.72,000 என்றளவில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவியருக்கு மட்டும் கல்வி ஊக்கத்தொகை நேரடியாக வங்கிக்கணக்கு மூலம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதற்கு எதுவாக மாணவிகள் அஞ்சலக சேமிப்பு கணக்குக்கு பதில், வங்கிகளில் தனிநபர் வைப்புநிதி கணக்கு தொடங்கப்படுகிறது. இதன் மூலம், ஒவ்வொரு மாணவியருக்கும் தனித்தனியாக தனிநபர் வைப்பு நிதி கணக்கு தொடங்க ஏதுவாக ரூ.16.75 கோடி நிதியை விடுவிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.