சென்னை: தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள தாமிரை ஆலை வளாகத்தில் பசுமைத் தாமிர ஆலை அமைக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த மனுவுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துளளது.

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் பசுமைத் தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி கோரி வேதாந்தா திறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில், தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. “அந்த இடம் மாசடைந்துள்ளது என்றும், புதிய மொந்தையில் பழைய கள் என்பது போல இத்திட்டத்தை அந்நிறுவனம் முன்வைக்கிறது” என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆலை நிர்வாகம் தரப்பில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ‘பசுமை காப்பர்’ ஆலையை அனுமதிப்பது தேசிய நலனுக்கு உதவும் என்று தெரிவித்துள்ளது. மேலும், புதிய சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான செப்பு உற்பத்தி நடைமுறைகளைப் பயன்படுத்துவது உள்நாட்டு தாமிர உற்பத்தியை அதிகரிக்கும் என்றும் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த மனு குறித்து, மத்திய சுற்றுச்சூழ அமைச்சகம் கனிம வளத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் தாமிர ஆலை மக்கள் போராட்டம் மற்றும் துப்பாக்கி சூடு போன்ற அசம்பாவிதங்களால் மூடப்பட்டது. இதன் காரணமாக இந்திய அரசுக்கு தேவையான தாமிரம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை உருவாகி உள்ளது.இதையடுத்து, வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் காப்பர் பிரிவு, அதன் பசுமை காப்பர் ஆலை திட்டம் தொடங்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தை நாடியது. உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசையும் அங்குள்ள நீதிமன்றத்தையும் நாட அறிவுறுத்தியது.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. “அசல் செயல்முறையை மாற்றுவதன் மூலம் பசுமை காப்பர் முயற்சிகளைத் தொடங்கும் விஷயத்தில்”, தமிழ்நாடு அரசு தனது பிரதிநிதித்துவங்களை முடிவு செய்ய உத்தரவிடக் கோரி வேதாந்தா தாக்கல் செய்த ரிட் மனு சமீபத்தில் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணை செய்யப்பட்ட வருகிறது. கடந்த விசாரணையின்போது, பசுமை தாமிர ஆலை தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள தகுதி வாய்ந்த அரச அதிகாரிகளிடம் புதிய விண்ணப்பத்தை தாக்கல் செய்யலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழக்கின் விசாரயின்போது, அரசு வழக்கறிஞர், சம்மத மீறல் மற்றும் பிற மீறல்கள் காரணமாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுக்கப்பட் டதாகவும், அதற்கான “உத்தரவை உச்ச நீதிமன்றம் வரை கொண்டு சென்றதாகவும்” தெரிவித்தார்.
“மனுதாரர் மீண்டும் வழக்குத் தொடர விரும்பினால், தலைமைச் செயலாளர் மற்றும் துறைகளின் பிற செயலாளர்களுக்கு அனுப்பப்படும் பிரதிநிதித்துவங்களை மட்டும் அல்லாமல், தகுதிவாய்ந்த அதிகாரிகளிடம் முறையான விண்ணப்பங்களை தாக்கல் செய்ய வேண்டும்” என்று வழக்கறிஞர் மேலும் கூறினார்.
வழக்கில் ஆஜரான உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பி.ஆர். கோபாலன், “இது வேதாந்தா ஒரு பசுமை செப்பு உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான முறையான விண்ணப்ப செயல்முறையைத் தொடங்க வழி வகுக்கிறது.” சுற்றுச்சூழல் ரீதியாக நிலையான முயற்சிகளை ஆதரிக்கும் குடிமக்கள் குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும், வேதாந்தாவின் பசுமை செப்பு ஆலை நிறுவப்பட்டால், தொழில்துறை வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை இணைந்து வாழ முடியும் என்பதை உறுதிப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், இது “தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள முன்னேற்றத்தில்” ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றும் கூறினார்.
இந்த வழக்கில், வேதாந்தா லிமிடெட்டின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் செப்பு அலகு மனுதாரராக இருந்தது. தமிழ்நாடு அரசின் தொழில்துறைத் துறை மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை ஆகியவை முதல் இரண்டு பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டு உள்ளது. மேலும், மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் சுரங்க அமைச்சகங்கள், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழகத்தின் SIPCOT ஆகியவை மற்ற நான்கு பிரதிவாதிகளாக சேர்ககப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]