டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மதியம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த ஓராண்டாக பிடிவாதமாக போராட்டம் நடத்தியதை அடுத்து வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நிலையில், அடுத்த வாரம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரும் கூட விருக்கிறது. இதையடுத்து, இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.
இதில், வேளாண் சட்டங்களுக்கு வாபஸ் பெற அனுமதி உள்பட பல்வேறு நிகழ்வுகள், திட்டங்களுக்கான அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.