விருதுநகர்,

ரும் ஆடி அமாவாசை அன்று சதுரகிரி மலைக்  கோவில் சென்று தரிசனம் செய்யப் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா மிகவும் முக்கியமானதாகும்.

இந்த வருடம் ஆடி அமாவாசை வரும் 20 ஆம் தேதி வருகிறது.

இதையொட்டி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர்,

“கொரோனா பரவலைத் தடுக்க 31 ஜூலை வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆகவே ஆடி அமாவாசைக்கு சாமி தரிசனம் செய்ய சதுரகிரி மலைக் கோவிலுக்குச் செல்ல அனுமதி இல்லை.

ஜூலை 21 வரை தாணிப்பாறை, மாவூத்து மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்கள் கூட்டமாகக் கூடக் கூடாது.

உத்தரவை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்”

எனத் தெரிவித்துள்ளார்.