சென்னை:
லங்கைக்கு உதவ தமிழ்நாடு அரசுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்றுமதி, இறக்குமதி கடும் பாதிப்பை கண்டுள்ளது. மக்கள் உணவு பொருட்களுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து மக்கள் பலர் படகுகள் வழியாக தமிழகம் தப்பி வருவது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இலங்கைக்கு இந்திய அரசு பொருளுதவி மற்றும் கடனுதவியும் செய்து வருகிறது. இருந்தாலும் தமிழ்நாடு அரசு அங்குள்ள இலங்கை தமிழர்களுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்குவதற்காக மத்திய அரசின் அனுமதியை கோரியிருந்தது.

இந்நிலையில், இலங்கைக்கு உதவ தமிழ்நாடு அரசுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.