பிரிட்டனைச் சேர்ந்த எயிட்ஸ் நோயாளியான 44 வயது சமூக சேவகர் ஒருவர் இந்த உயிர்க்கொல்லி நோயிலிருந்து முற்றிலும் குணமடைந்த முதல் மனிதர் என்ற பெயரைப் பெறபோகிறார்.

பிரிட்டனைச் சேர்ந்த மருத்துவர்கள் இவரது உடலில் மேற்கொண்ட சோதனைகள் வெற்றியடைந்திருக்கிறது.
செயலிழந்த நிலையில் இருக்கும் டி-செல்கள் எனப்படும் நோய் எதிர்ப்பு செல்களை வோரினோஸ்டாட் என்ற மருந்தைக் கொண்டு உயிர்ப்பிப்பதன் மூலம் எச்.ஐ.வி வைரஸ்களை அழிக்க முடியும் என்று கண்டறியப்பட்டு உள்ளது.
இந்தப் பரிசோதனைகள் முடிந்து மருந்து புழக்கத்துக்கு வர இன்னும் 5 ஆண்டுகள் பிடிக்கும் என்று தெரியவருகின்றது.
Patrikai.com official YouTube Channel