சென்னை:  திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி மீது அவரது இயக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். அதில், கொளத்தூர் மணி நிர்வாண படங்களை காட்டி பணம் பறிப்பதாக  அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
தந்தை பெரியார் கொள்கைகளை முன்னெடுத்து செல்வதில், திராவிடர் கழகத்தைத் தொடர்ந்து, திராவிடர் விடுதலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பானது பெரியார் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து தனி அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக, கொளத்தூர்  இருந்து வருகிறார். இவர்மீது அவரது அமைப்பைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், நிர்வாண படத்தைக்கொண்டு பணம் பறிப்பதாக குற்றம் சுமத்தி உள்ளார்.
சம்பவத்தன்று திராவிடர் விடுதலைக் கழகத்திற்கு அந்த பெண் சென்றுள்ளார். இதையறிந்த கொளத்தூர் மணியின் ஆதரவாளர்கள், அந்த பெண்ணை உள்ளே விட மறுத்து தகராறு செய்ததுடன், அவரை  கடுமையான வார்த்தகாளல் அசிக்கப்படுத்தினார். ஆனால், அந்த பெண்ணும் அவர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் பேசினார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர், அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,  பெரியார் பெயரைச்சொல்லி ஒரு பொறுக்கி பெண்களை நிர்வாணப்படுத்தி மிரட்டி காசை வாங்கிட்டு இருக்கான்.  அதை கேட்க வந்தா, என்னை  என்னை ஆளவிட்டு அடிக்க வர்றாங்க. கொளத்தூர் மணி  நிர்வாண படங்களை பார்த்ததற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது, அவர்  நிர்வாண படங்களை காட்டி பணம் பறிக்கும் முயற்சியில்  ஈடுபடுவதாகவும், அவர் ஒரு பெண்ணின் நிர்வாணப் படத்தை  செல்போனில் பார்த்ததற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது.   இந்த ஆதாரங்களை வெளியிடப் போகிறேன். என  பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
மேலும்,   அந்த பெண், கொளத்தூர் மணி யாரு? அவர் ஆம்பள பெரியாரிஸ்ட் என்றால்,  நான்  பொம்பளை பெரியாரிஸ்ட்  என்று பரபரப்பாக கூறுகிறார். அந்த வீடியோவை வாசகர்களே நீங்களும் பாருங்களேன்..