திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், கம்யூனிச தலைவர்களில் ஒருவரான லெனின் சிலை அகற்றப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், “அங்கே லெனின் சிலையை அகற்றியது போல தமிழகத்தில் ஈ..வெ.ரா சிலை அகற்றப்படும்” என்கிற அர்த்தத்தில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டார்.
அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அவர் தனது பதிவை அழித்தார். மேலும், தனது ஒப்புதல் இல்லாமல் அட்மின் பதிவேற்றிவிட்டார் என்று தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் எல்லோரது பார்வையும் எச்.ராஜா நோக்கித்தான் இருக்கிறது. ஆனால் அவருக்கு முன்பே, “தமிழகத்தில் பெரியார் சிலையை வீழ்த்த வேண்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தீயைப் பற்ற வைத்தர் எஸ்.ஜி. சூர்யா என்பவர்.
இவர், பா.ஜ.க.வின் இளைஞர் பிரிவான யுவ மோர்ச்சாவின் துணைத் தலைவர்.
(இது குறித்து நேற்றே செய்தி வெளியிட்டிருந்தோம்)
ஆனால் ஏனோ இவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.
இதற்கிடையே எச்.ராஜா தனது பதிவை நீக்கியபோது, “அவர் நீக்கவில்லை. சிலர் பேஸ்புக் நிர்வாகத்திடம் புகார் செய்து நீக்கச் செய்துவிட்டார்கள்” என்று பொய்யாக பதிவிட்டார் எஸ்.ஜி. சூர்யா. (பிறகு தான்தான் அந்தப் பதிவை நீக்கியதாக எச்.ராஜாவே வெளிப்படையாக சொல்லிவிட்டது குறிப்பிடத்தக்கது.)
அதே நேரம் இப்போது தனது ட்விட்டர் கணக்கை முடக்கிவிட்டார் எஸ்.ஜி.சூர்யா.