தேனி:
பெரியாறு அணையில் இருந்து இன்று முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் 18ம் கால்வாய் கீழ் உள்ள பாசன நிலங்களுக்கு இன்று முதல் 30 நாட்களுக்கு பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தேனி உத்தமபாளையம் தாலுகாக்களில் 4614.25 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும். அதேபோல் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள பி.டி.ஆர். மற்றும் பெரியாறு வாய்க்கால்களின் கீழ் உள்ள ஒரு போக பாசன நிலங்களுக்கு பெரியாறு அணையில் இருந்து இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தேனி உத்தமபாளையம் தாலுகாக்களில் உள்ள 5146 ஏக்கர் ஒருபோக பாசன நிலங்கள் பாசன வசதி பெறும்.