லண்டன் விமான நிலையத்தில் எடப்பாடிக்கு எதிர்ப்பு தெரிவித்த பெரியார் அம்பேத்கர் வட்ட நிர்வாகிகள்! (வீடியோ)

Must read

லண்டன்:

மிழகத்திற்கு தொழில்முதலீட்டை ஈர்ப்பதற்காக 10நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு லண்டன் விமான நிலையத்தில், அங்குள்ள பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்  நிர்வாகிகள் கறுப்புச்சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை வெளிநாடு புறப்பட்டார். சென்னையில் இருந்து துபாய் வழியாக லண்டன் சென்றார். எடப்பாடி பழனிசாமியையும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் வரவேற்க சிலர் காத்திருந்தனர்.

அப்போது,

நீட் தேர்வுக்கு எதிராக  லண்டன் விமான நிலையத்தில், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக சுகதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கருக்கு எதிராக கருப்பு உடையுடன் கையில் பதாதை களுடன்  பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்  நிர்வாகிகள்  ஆர்ப்பாட்டம் செய்தனர். புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீட் தேர்வை தமிழகத்தில் நுழையவிட்டது ஆகியவற்றை கண்டித்தும் தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

அதேவேளையில், முதல்வரையும், சுகாதாராத்துறை அமைச்சரையும் வரவேற்க சிலர் காத்திருந்தனர்.  இவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக, முதல்வர் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் பிரதான வழியில் விமான நிலையத்தை விட்டு வெளியேறாமல் மாற்றுவழி மூலம் வெளியில் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

இதுகுறித்து கருத்து பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்ட அமைப்பினர், தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே நாங்கள் வந்தோம். புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, நீட் தேர்வு எதிர்ப்பு ஆகவே எங்கள் கோரிக்கை.புதிய கல்விக் கொள்கையின் ஆபத்தை எடுத்துரைக்கவே இந்த போராட்டம் என்று குறிப்பிட்டனர்.

 

More articles

Latest article