சென்னை: குமரி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் நீத்தேக்கம், நந்தன் கால்வாய், ரேசன் கடைகளில் காலி பணியிடம் நிரப்புவது உள்பட சட்டமன்ற உறுப்பினர் களின் பல்வேறு கேள்விகளுக்கு சட்டப்பேரவையில் துரை சார்ந்த அமைச்சர்கள் பதில் கூறினர்.
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்று நடைபெறுகிறது.இரு துறைகள் மீது நடைபெறும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் பதிலளிக்க உள்ளனர்.
முன்னதாக இன்று காலை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் கூறினர்.
அப்போது குமரி மாவட்ட மற்றும் விழுப்புரம் தொகுதி உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர்துரைமுருகன், கன்னியாகுமரி மாவட்டம் பெரியகுளம் நீர்த்தேக்கத்தில் சிறிய அணை கட்டுவது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விழுப்புரம் மாவட்டம் நந்தன் கால்வாய் திட்டம் சீரமைக்கப்படும் எனவும் கூறினார்.
ரேஷன் கடைகளில் காலிப்பணியிடங்களை அதிவேகமாக நிரப்ப துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியின் மூலமாக கட்டப்பட்ட கூட்டுறவு நியாவிலைக்கடைகள் இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது என்று துணை சபாநாயகர் பிச்சாண்டி கேள்வி எழுப்பினர்.
அதற்க்கு எந்த மாவடத்தில் எங்கு கடைகள் திறக்கப்படாமல் இருக்கிறது என்று குறிப்பிட்டு தெரிவித்தால் உடனடியாக கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி பதில் அளித்துள்ளார். மேலும், கூட்டுறவு நியாய விலைக்கடை, கட்டப்பட்டு செயல்படாமல் இருந்தால், காரணம் அறிந்து இயக்க முயற்சி மேற்கொள்ளப் படும் என்றும், 500 ரேசன்கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, சொந்த கட்டிடம் கட்டுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் மேலும் வெற்றி பயிர் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பிய உறுப்பினருக்கு, வெற்றிலை பயிர் ஆராய்ச்சி மையம் தேவைக்கேற்ப இருக்கின்றன. தற்போது புதிதாக அமைப்பதற்கு சாத்தியமில்லை என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பதில் கூறினார்.
பொள்ளாச்சியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி தொடுத்தார். அவருக்கு பதில் கூறிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொள்ளாச்சியில் 1 அரசு உதவி பெறும், 2 சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளது. இங்கு மொத்தம் உள்ள 1,640 இடங்கள் உள்ளன. ஆனால், 674 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். வரும் காலங்களில் தேவை ஏற்பட்டால், பாலிடெக்னிக் கல்லூரி தொடங்குவது பற்றி பரிசீலிக்கப்படும் என்றார்.