சென்னை: பேரறிவாளனுக்கு மேலும் 90 நாட்கள் பரோல் கோரி உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில், 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு 90 நாள்கள் பரோல் கோரி, அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த மாதம் வழக்கு தொடா்ந்தார். வழக்கில் சிறைத்துறை தரப்பில் பேரறிவாளனுக்கு பரோல் தர முடியாது என்று கூறப்பட்டது.

ஆனாலும், பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோல் வழங்க அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, ஜோலார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.

1 மாதம் பரோல் முடிய உள்ள நிலையில், மீண்டும் ஒரு மாதம் பரோல் கேட்டு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உயா் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அதை விசாரித்த நீதிமன்றம் மேலும் இரு வாரங்களுக்கு பரோல் காலத்தை நீட்டித்தது.

இந்நிலையில் பேரறிவாளனுக்கு மேலும் 90 நாட்கள் பரோல் கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது நாளை உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்துகிறது.