ஈரோடு: மகன் இறந்த துக்கத்தில் இருந்து விடுபட மக்கள் பணியே ஆறுதல் என அங்கு நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் வேட்பாளர்  இவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா எதிர்பாராத விதமாகக் கடந்த மாதம் மரணமடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவித்தது  அதன்படி,  பிப்ரவரி 27-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  வேட்புமனுத்தாக்கல், ஜனவரி 31ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற  பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர். நேற்று  காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

முன்னதாக திமுக கூட்டணி கட்சிகள் சார்பில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாகு  தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. திமுக அமைச்சர்கள் குழுவே களத்தில் இறங்கி வேட்டையாடி வருகிறது.  கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தி.மு.க.வினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அமைச்சர்கள் சு.முத்துசாமி, செந்தில்பாலாஜி, கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியம், ராஜகண்ணப்பன், சக்கரபாணி உள்ளிட்டோர் ஈரோட்டில் முகாமிட்டு தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். தி.மு.க.வினர் வீடு, வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனது தேர்தல் பிரசாரத்தை நேற்று தொடங்கினார். அவர் ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரிய பகுதியில் ஒவ்வொரு வீதியாக நடந்து சென்று வாக்குகளை சேகரித்தார். அப்போது வீடு, வீடாக சென்ற அவர் பொதுமக்களை சந்தித்து கை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.

நேறறு மாலை இளங்கோவனுக்கு ஆதரவாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வாக்குகளைச் சேகரித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, இடைத்தேர்தலில் திமுக நிச்சயம் வெல்லும் என்றும் ஈரோடு கிழக்கில் எத்தனை வேட்பாளர்கள் உள்ளனர் என்பது கூட தெரியாமல் அதிமுக பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாகச் சாடினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், “இந்த இடைத்தேர்தலில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பது எனக்குத் தெரியும்.. தந்தை வழியில் மகன் செயல்பட்டு நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.. ஆனால், இங்கு மகன் வழியில் தந்தை செல்கிறேன். மகன் மறைந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை.. மக்கள் தரும் அன்பும் பாசமும் அதில் இருந்து மீள உதவுகிறது.

எனது மகன் இறந்தபோது நான் முதலில் பேசிய அமைச்சர் முத்துசாமியிடம்தான். அவர் அடுத்த 5 நிடத்தில் என்னை மீண்டும் அழைத்து முதலமைச்சரிடம் தெரிவித்துவிட்டேன். தேவையான உதவிகள் கிடைகும் என்றார். இப்போது எனக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கச் செந்தில் பாலாஜி வந்துள்ளார். அவர் எனக்கு மற்றொரு மகன் என்றே கூடச் சொல்லலாம். தேர்தல் களத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி வந்துவிட்டார். இனிமேல் எனது வெற்றி உறுதிதான். இந்தத் தேர்தலில் மக்கள் எங்களுக்கு நல்ல ஆதரவு உள்ளது.

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களிடம் எனக்கு இருக்கும் உரிமையை வைத்து ஈரோடு மக்களுக்குப் பல நல்ல காரியங்களைச் செய்வேன்.‘ எப்போது நான் ஈரோடு மக்களின் முகத்தில் சிரிப்பைப் பார்க்கிறேனோ.. அப்போது தான் நான் எனது மகன் நினைத்ததைச் செய்துள்ளேன் என்று பொருள்… இப்போது எங்கள் குடும்பத்தில் நான், எனது மனைவி, இளைய மகன் சஞ்சய் என்று மூன்று பேர் இருக்கிறோம். எங்களுக்கு இப்போது எதுவும் தேவையில்லை.. எனது முன்னோர்கள் சம்பாதித்து வைத்த சொத்தில் 90% நான் விற்றுவிட்டேன் என்பது உண்மைதான். இருப்பினும் மீதம் 10% இருக்கிறது. அதுவே எனக்கும் எனது குடும்பத்திற்கும் வாழ்க்கை நடத்த போதும் . ஈரோட்டில் போக்குவரத்து நெரிசல் தான் பெரிய பிரச்சினையாக உள்ளது.. ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்குச் செல்லவே அதிக நேரம் ஆகிறது. இதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன்” என்று அவர் தெரிவித்தார்.