காஞ்சிபுரம்:
தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காடு கிராமத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார்.
அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஊராட்சிகளை மேம்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது; திட்டங்களை கடைக்கோடி மக்களிடம் கொண்டு செல்ல ஊராட்சி அமைப்புகளால்தான் முடியும் என்றார்.