சென்னை: பொய்யான மற்றும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளுக்காக நினைவுகூறப்படும் கட்சியாக பாரதீய ஜனதா திகழும் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது; வளர்ச்சிக் குறித்த புள்ளி விபரங்கள் விஷயத்தில், நரேந்திர மோடியின் அரசு தொடந்து பொய்சொல்லி வருகிறது. ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை மேற்கொண்டதன் மூலமாக, நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை நசுக்கிவிட்டார் மோடி.
புள்ளி விபரங்களை மாற்றியமைத்து, வளர்ச்சியை அவர்கள் உருவாக்கியுள்ளதாக மக்களிடம் காட்டிக் கொள்கிறார்கள். இதற்காக மிகவும் மெனக்கெடுகிறார்கள்.
வருங்காலத்தில் பாரதீய ஜனதாவைப் பற்றி மக்கள் நினைத்துப் பார்த்தால், அவர்கள் மனதில், வங்கிக் கணக்கில் செலுத்துவதாக சொன்ன ரூ.15 லட்சம், விவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்காக்குவோம் என்ற வாக்குறுதி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் மோசமான முறையில் ஜி.எஸ்.டி. அமல் செய்தது உள்ளிட்ட விஷயங்கள்தான் வந்துபோகும்” என்றார்.
– மதுரை மாயாண்டி