பெங்களூரு :
பச்சையாக மாறியுள்ள பகுதிகளில் மதுபான கடைகள் உள்ளிட்டவற்றை திறந்துகொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில்.
இளவட்டங்களின் இன்ப நகரமான பெங்களூரில் இன்று அனைத்து ஒயின் ஷாப்புகளிலும் நீண்ட வரிசையில் நின்று தங்களுக்கு விருப்பமான மதுவகைகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர் மது பிரியர்கள்.
ஆண் பெண் பேதம் இன்றி அனைவரையும் கவர்ந்த ‘பப்பு’கள் கட்டுபாடு காரணமாக திறக்கப்படாததால், இன்று அனைவரும் வீதிக்கு வந்து நெடுந்தூரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
சில கடைகளில், பெண்களுக்கு பிரத்யேக வரிசை ஏற்படுத்தப்பட்டது, அங்கும் பெண்கள் நீண்ட வரிசையில் பொறுமையுடன் நின்று வேண்டிய சரக்கை வாங்கிச் சென்றனர்.
குடிமகன்கள் பலர் குடும்பத்துடன் வந்து கால்கடுக்க நின்றாலும், தங்கள் பலநாள் ஆசை திருநாள் ஆன சந்தோஷத்தில் இன்றிரவு உற்ச்சாகமாக தூங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை.