சென்னை : “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என கோட்டையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து, , தண்டையார்பேட்டை காமராஜர் நகரில் ரூ.39.30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர்கள் குடியிருப்பு – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை தலைமைச்செயலகத்தில், நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த ஆய்வு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம்களுக்கு வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதை உறுதி செய்திட வேண்டும், “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம்களுக்கு வருகை தரும் மக்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கிட போதுமான தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும், முகாம்கள் நடைபெறுவது குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரம் செய்து, மக்களுக்கு முகாம்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்,” என அறிவுறுத்தினார்.
