திருவாரூர் அருகே ஆழ்குழாய் அமைத்து எண்ணெய் எடுக்கும் ஒஎன்ஜிசி பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கிராமத்தினர் சாலைகளில் தடுப்பு ஏற்படுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
திருவாரூர் மாவட்டம் பெருந்தரகுடி ஊராட்சிக்குட்பட்ட கடம்பக்குடி கிராமத்தில், 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆழ்குழாய் அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   இதனால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறிய பொதுமக்கள், ஓஎன்ஜிசி பணிகளை நிறுத்தக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.  பொதுமக்களின் எதிர்ப்பால், ஓஎன்ஜிசி பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
tvr_5
ஆனால் தற்போது  பணிகளை அந் நிறுவனம் தொடர திட்டமிட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், சாலைகளில் தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர்.
பேச்சுவார்த்தை நடத்த வந்த குடவாசல் வட்டாட்சியர் தங்கமணிக்கும் கடம்பக்குடி கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

[youtube-feed feed=1]